நாளை முதல் கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி