நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ​​நீதித்துறை மற்றும் நீதவான்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வெளியிட்டதாகக் கூறி நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் பலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து, அவரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் இன்று முற்பகல் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி