இளம் சமூக செயற்பாட்டாளரான சஞ்ஜீவ விமலகுணரத்ன, அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைஇ சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சஞ்சீவ விமலகுணரத்னஇ இதற்கு முன்னர் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தில் உள்நாட்டுப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாக ஏறக்குறைய 20 வருட அனுபவம் கொண்ட இவர்இ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த சர்வதேச குடியேற்ற அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சஞ்சீவ விமலகுணரத்னவை நியமிக்குமாறு பல சிவில் சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

'நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' உட்பட பல சிவில் அமைப்புக்கள், சஞ்ஜீவவின் நியமனம் தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதோடு அவருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி