'த லீடர்' ஊடக வலையமைப்பின் நிர்வாக,ஆசிரியர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாளாந்தம் சிறப்புச் செய்திகளையும், நடப்புத் தகவல்களையும் வெளியிடும் 'த லீடர்' ஊடக வலையமைப்பின் நிர்வாக மற்றும் ஆசிரியர் குழுவில் இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 'த லீடர்' (theleader.lk) சிங்கள ஊடக இணையத்தளத்தின் ஆசிரியராக துஷாரா செவ்வந்தி விதாரணவும், சிறப்பு எழுத்தாளராக அபிஷேகா வாசலபண்டாரவும் கடமையாற்றவுள்ளனர்.

தமிழ் ஊடகமாக தமிழ் லீடர் (tamilleader.lk) இணையத்தளத்தின் ஆசிரியராக நிருஷா கனகசபை இருப்பார்.

ஆங்கில ஊடகமான 'லங்கா லீடர்' (lankaleader.lk) இணையத்தளத்தின் ஆசிரியராக பூர்ணிமா முஹந்திரம் பணியாற்றுவார்.

பூர்ணிமா முஹந்திரம், 'லீடர்' ஊடக வலையமைப்பை நடத்தி வரும் 'த லீடர்' என்ற தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாவார்.

editors
'த லீடர்' நிறுவனத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ், மேலும் பல சமூக ஊடக வெளியீடுகள் புதிய வடிவத்துடன் வருங்காலத்தில் ஆரம்பிக்கப்படும்.

இதுவரை பேணப்பட்டு வந்த கொள்கைக் கட்டமைப்பிற்குள் 'த லீடர்' தொடர்ந்து பணியாற்றும் என பிரதம ஆசிரியர் துஷார செவ்வந்தி விதானகே வலியுறுத்துகிறார்.

The Leader TV

லீடர் டிவி யூடியூப் சேனலை Web Cast Ceylon (Pvt.Ltd) நடத்துகிறது. சிறிமலி லியனகம அதன் செய்தித் தொடர்பாளர் ஆவார்.

இதே நிறுவனத்தின் கீழான 'லேடி லீடர்' (ladyleader.lk) இணையத்தளத்தின் ஆசிரியராகவும் சிறிமலி லியனகம இருப்பார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி