ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும்

பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாணந்துறையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஹொரண குருகொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து, இலிபா பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலையின் பேருந்து, பாடசாலையருகே நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்தின் பின்புறம் மோதியதையடுத்து, பாடசாலை பேருந்து சுமார் நூறு மீற்றர் முன்னோக்கிச் சென்று, மின் கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது  பாடசாலை பேருந்தில் மாணவர்கள் இல்லை என்றும் மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும் இதன்போது ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் சுமார் நாற்பது ஊழியர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடை தொழிற்சாலையின் பேருந்து சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி