Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

6 தடவைகள் பிரதமராக இருந்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு தராதவர் ரணில்! -ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

செப்டம்பர் 2, 2024 • 8:09 AM

6 தடவைகள் பிரதமராக இருந்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு தராதவர் ரணில்! -ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித் பிரேமதாச இருப்பார்.
  • இம்மாதம் (03) வவுனியா மாவட்டத்துக்கும் மாலையில் மன்னார் மாவட்டத்துக்கும் சஜித் பிரேமதாச வரவுள்ளார்.
  • அணிதிரண்டு அவரை ஆதரிக்க வாருங்கள். ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க.
எழுத்து அளவு:

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்,

மன்னாரில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர் தெரிவித்ததாவது,

"சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்லவைக்க வேண்டும். மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித் பிரேமதாச இருப்பார்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும்  இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அயல்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே. இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம். அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

இம்மாதம் (03) வவுனியா மாவட்டத்துக்கும் மாலையில் மன்னார் மாவட்டத்துக்கும் சஜித் பிரேமதாச வரவுள்ளார். அணிதிரண்டு அவரை ஆதரிக்க வாருங்கள். 
 
ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. எமது மக்களின் பிரச்சினைகள் எவற்றையும் அவர் தீர்க்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தந்திரமாக இழுத்தடித்தார்.

சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது. வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர். விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.

பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள்" என்று குறிப்பிட்டார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...