Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

6 மாதங்களில் தாக்குதலுக்கு உள்ளான 153 பொலிஸார்: பதியத்தலாவ ஓஐசி மீது மனைவி தாக்குதல்!

T

The Leader Desk

ஜூன் 11, 2024 • 3:35 AM

6 மாதங்களில் தாக்குதலுக்கு உள்ளான 153 பொலிஸார்:  பதியத்தலாவ ஓஐசி மீது மனைவி தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ,13 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 153 பொலிஸார் கடந்த ஆறு மாதங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்களில் 81 சார்ஜன்ட்களும் 54 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.
  • சம்பவங்களில் 31 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.
  • சார்ஜென்ட்கள், 14 கான்ஸ்டபிள்கள், மூன்று பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இவர்களில் அடங்குவர்.
எழுத்து அளவு:

,13 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 153 பொலிஸார்  கடந்த ஆறு மாதங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 81 சார்ஜன்ட்களும் 54 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.

இவர்களில் 143 பேர் உத்தியோகபூர்வ பொலிஸ் கடமைகளைச் செய்யச் சென்றபோது தாக்கப்பட்டுள்ளனர். 

பதியத்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவரது  மனைவி எனக் கூறப்படுபவர் அவரது வீட்டில் வைத்து தாக்கிய சம்பவம்  தவிர, மற்ற ஒன்பது சம்பவங்களும் அவர்களது வீடுகளுக்குச செல்லும்போது  வழியில் வைத்தும் மற்றையவை கடமையில் இல்லாதபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்.

இந்த ஆறு மாதங்களில் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

28 சம்பவங்களில் 31 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 13 சார்ஜென்ட்கள், 14 கான்ஸ்டபிள்கள், மூன்று பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் இவர்களில்  அடங்குவர்.

அதற்கு அடுத்தபடியாக வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இரு மாகாணங்களிலும்  தலா 12 வழக்குகள் என 24 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தில் 10 தாக்குதல் சம்பவங்களும், கிழக்கு மாகாணத்தில் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டனர்.

இதேவேளை, கடமைகளை செய்யும்போது அதிகாரிகளை தாக்கும் நபர்களைக் கைது செய்து சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் மா அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பணிக்கு புறம்பான சம்பவங்கள் காரணமாக தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிடியாணை கைதுகள், சட்ட அமுலாக்க போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பிற கடமைகளின்போதும் பலர் கடமையில் தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...