leader eng

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

சமன் ஏக்கநாயக்க இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியாவார்.

2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட சமன் ஏக்கநாயக்க, இந்த வருடம் நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகாரம், நிதி ஆகிய அமைச்சுகளிலும் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிலிலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி