சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான Standard and poor’s (S&P), தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான ஏப்ரல் 18 அன்று செலுத்த வேண்டிய வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தரில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றது. குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard and poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக் காலமாக முடீஸ், பிட்ச், Standard and poor’s ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக கடன் தரப்படுத்தலில் இலங்கையை தரமிறக்கி வருகின்றன.

சர்வதேச செலாவணி நிதியத்தின் விளக்கப்படி, ஒரு கடனின் தவணை அல்லது வட்டியை உறுதியளித்தபடி குறிப்பிட்ட கெடுவுக்குள் செலுத்தத் தவறுவதே கடன் தவணை தவறுவதாகும்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பாத நிலையில் இது நடக்கும். 

1960களுக்குப் பிறகு 140-க்கும் மேற்பட்ட நாடுகள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறியிருக்கின்றன. அர்ஜென்டீனா, லெபனான், எக்வடோர், ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்தன.

இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டாலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது. 

இலங்கை இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபோது 'கடன் தர மதிப்பீடு' வழங்கும் அமைப்புகள் இலங்கையின் தரமதிப்பைக் குறைக்கின்றன. 

இதனால் புதிய கடன்கள் வாங்குவது பாதிக்கப்படும் அல்லது கூடுதல் வட்டி செலுத்த நேரிடலாம். நாட்டுக்குள் முதலீடு வருவது பாதிக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் "இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக இருக்கக்கூடும் மற்றும் அதை முடிக்க நீண்ட கால அவகாசம் எடுக்கலாம்" என்று தரமதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

"இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக இருக்கக்கூடும் மற்றும் அதை நிறைவு செய்ய நீண்ட கால அவகாசம் எடுக்கலாம்" என்று தரமதிப்பீட்டு நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 


“நாட்டிற்கான சீர்திருத்தம் மற்றும் நிதியுதவி திட்டத்தை நிறுவ IMF உடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. "அத்தோடு நாடு சமீப வாரங்களாக  அரசியல் நிச்சயமற்ற தன்மையை அனுபவித்து வருகிறது, தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

"ஒரு நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தோல்வியானது IMF உடனான விவாதங்களில் மேலும் சிக்கலாகி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இது இறுதியில் ஒரு விரிவான சீர்திருத்தத் திட்டத்தை தாமதப்படுத்தலாம். என Standard and poor’s (S&P) நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி