காலி முகத்திடலுக்கு சென்று உணவு உட்கொள்ள மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் உணவுக்காக காலி முகத்திடலுக்கு சென்று நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரம்புக்கனை சம்பவ இடத்திற்கு பிரதி சொலிசிடர் ஜெனரல் சென்றுள்ளமை அவசியமற்றது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு யார் ஆணை பிறப்பித்தது என்று இதுவரையில் குறிப்பிடப்படவில்லை.

'பி ' அறிக்கை ' எ ' அறிக்கையாக்கப்பட்டுள்ளது. பிறகு பி அறிக்கையில் பெயர் நீக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு பிரயோகத்திற்கான காரணம் பி அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இச்சம்பவத்தில் அவ்வாறு குறிப்பிடப்பிடவில்லை.

ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த லக்‌ஷான் எரிபொருள் பெற்றுக் கொள்ளவதற்காக சென்றே உயிரிழந்தார்.
நாம் அரசியலமைப்பினை திருத்தம் செய்வதற்காக கூடியுள்ளோம். மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண அவதானம் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றிற்கு குறிப்பிடுங்கள்.

நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் சீனாவுடனான கடன் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகள் கடன் வழங்கும் போது கடன் செலுத்தலுக்கு காலவகாசம் வழங்கும் அல்லது கடன் நிவாரனம் வழங்கும், ஆனால் சீனா அதனின் கடனை திருப்பி செலுத்தலுக்கு கடன் வழங்குகிறது.

எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள், எரிவாயு பிரச்சினை தோற்றம் பெறும் அப்பிரச்சினை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சம்பிரதாய அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட்டால் மாத்திரமே தீர்வு காண முடியும் என்றார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி