மட்டகளப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி (37), அவரது பதினொரு வயது மகள் நைனிக்கா மற்றும் நான்கு வயது மகன் ரங்கீசன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


குறித்த பெண் தனியாக தனது குழந்தைகளை அழைத்து கொண்டு நேற்று இரவு ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் சென்று இறங்கி உள்ளனர்.

இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை பணம் 2 லட்சத்தி 50 ஆயிரம் கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தாக வாசினி பாதுகர்ப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு பின் மூவரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக படகு மூலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 42 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இதனைத் தடுப்பதற்காக சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கு அடைக்களம் வழங்குமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி