இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டு மேலும் நான்கு இலங்கையர்கள் இந்தியா, தனுஸ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு மன்னார் மாவட்டம் முத்தரமித்தரை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகாஷ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஒரு பைப்பர் படகில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் இவ்வாறு சென்ற இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களின் விலை ஏற்றம் மட்டும் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகப்பு வட்டார அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் குறித்த நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இலங்கையில் இருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றநிலையில் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இறுதிகட்ட போரின்போதும் அதிகமான வடகிழக்கு மக்கள் அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சென்றனர் தற்போதும் அவர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையிக் தற்போதைய நிலைகாரணமாக இலங்கை வடகிழக்கு மக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி