பல வருடங்களாக மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு பல்வேறு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கூறுகிறார்.

"பொருளாதாரத்திற்கு மங்கள சரியான சிகிச்சையை வழங்கினார், இதனை IMF ஏற்றுக்கொண்டுள்ளது, இதற்கிடையில், 52 நாள் அரசாங்க சதி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. அதனால் வளர்ச்சி தடைபட்டது "என்று அவர் கூறினார்.

உண்மையான தேசப்பற்றாளர்கள் நிலையத்தினால்  (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி பாக்ய செனவிரத்ன, ஊடகவியலாளர்களான சஞ்சய லியனகே, ஊடகவியலாளர் ஹரேந்திர கிருஷ்ண சுவாமி, சிவில் சமூக செயற்பாட்டாளரும் பொருளாதார ஆய்வாளருமான கித்சர குணரத்ன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, அரசாங்கம் விதித்துள்ள சமூக ஊடகத் தடையை நீக்கியமை தற்போதைய இளைஞர்-மக்கள் எழுச்சியின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாக கருதமுடியும் என்றும் இளைஞர்களால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தோல்வியை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

அந்த இளைஞனின் தலையீட்டைப் பார்க்க, 'மங்கள இருந்திருந்தால்...' என நினைத்ததாகவும் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்."நமது நாடு நீண்ட காலமாக தேசபக்தி முழக்கங்களுக்கும், ஆவேசமான அரசியல் முழக்கங்களுக்கும் முன்னுரிமை அளித்து, அடிப்படை பொருளாதார யதார்த்தத்தை மிகைப்படுத்தி மற்றும் கீழறுத்து வருகிறது.

1983 இலங்கைக்கு பாரிய வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவருவதற்கான மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாட்டில் தமிழ் அரசாங்க அதிகாரி ஒருவர் உரையாற்றிய போது பொரளையில் தீ வைப்புத் தாக்குதல் ஆரம்பமானது. அன்று ஒரு நல்ல வாய்ப்பை இழக்கப்பட்டது” என்றார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது தலைமுறையினர் நாட்டுக்காக தமது பங்களிப்பைச் செய்யவில்லை என கூறியதை பேராசிரியர் ரொஹான் சமரஜீவ நினைவு கூர்ந்தார்.

இங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் ஹரேந்திரன் கிருஷ்ண ஸ்வாமி ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டதுடன், இன, மத பிளவுகளின் ஊடாக உருவாக்கப்படும் அரசு இந்த இளைஞர்களின் எழுச்சியின் முன்   நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பாரம்பரிய அரசியலுக்கு நினைவுபடுத்தினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி