சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த்தார்.
இன்று பாராளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. பாராளுமன்றம் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்றேல் நிலைமை மோசமாகும். இந்த நிலையில் தனியான குழுவாக இயங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

அத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகுவதாக இருந்தால் அதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கே கையளிக்கவேண்டும். அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகினால் பாராளுமன்ற ஆசனங்களில் அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும். அவ்வாறான எந்த விடயமும் இடம்பெறவில்லை. அதேநேரம் பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்திருக்கின்றார். அவரது இடத்துக்கு ஒருவரை உடனடியாக நியமிக்கவேண்டும். அதனால் சபாநாயகர் இதுதொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும் என இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அமைச்சர்கள் பதவி விலகியமை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் எனக்கு ஜனாதிபதி அறிவிக்க வில்லை. ஜனாதிபதி அறிவித்த பின்னர் தான் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி