Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

துபாயில் தொழில் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா மோசடி: ருவன்வெலவில் முகவர் கைது!

T

The Leader Desk

ஆகஸ்ட் 30, 2024 • 12:06 PM

துபாயில் தொழில் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபா மோசடி: ருவன்வெலவில் முகவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடந்த 28ஆம் திகதி ருவன்வெல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சந்தேக நபர் ருவன்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நிலையில் இவ்வாறு பண மோசடி மேற்கொண்டுள்ளார்.
எழுத்து அளவு:

தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடந்த 28ஆம் திகதி ருவன்வெல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேக நபர் ருவன்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நிலையில் இவ்வாறு பண மோசடி மேற்கொண்டுள்ளார்.
 
அங்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளார். 
 
இவர் இதற்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்திய போதும் இவர் பணத்தை மோசடி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் பணியகம் கூறுகிறது. 
 
சந்தேக நபரை ருவன்வெல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...