Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்கள்!

T

The Leader Desk

ஜூலை 16, 2024 • 11:16 AM

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் “ரன்தொர உறுமய" நிகழ்ச்சித் திட்டம் நாளை (17) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
  • இதன் முதற்கட்டமாக 1117 “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
  • அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 937 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
  • ரன்தொர உறுமய உரித்துரிமை உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், இதில் மறைமுக அரசியல் ஆர்வம் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எழுத்து அளவு:

குடியிருப்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும்  “ரன்தொர உறுமய" நிகழ்ச்சித் திட்டம்  நாளை (17) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 1117 “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 937 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன, மெட்ரோ வீட்டுத் தொகுதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள முப்பத்தொரு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இந்த " ரன்தொர உறுமய" உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, 20 இலட்சம் பேருக்கு காணி உரிமையை வழங்கும்  “ரன்தொர உறுமய" பத்திரப்பதிவுத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக,  முழு உரிமைகளை வழங்கி " ரன்தொர உறுமய" உரிமைப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும்  அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அரை மில்லியன் குடும்பங்கள் இந்த "ரன்தொர உறுமய" உரித்துரிமை உறுதிகளைப் பெறவுள்ளார்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

அதன்படி தற்போதைய அரசால் கிராமம் முதல் நகரம் வரை உறுதி பத்திரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது என்றார்.

ரன்தொர உறுமய  உரித்துரிமை உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2024 வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், இதில் மறைமுக அரசியல் ஆர்வம் இல்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...