Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கணவருடனான உடலுறவுக் காட்சிகளை இணையத்தில் பகிரப் போவதாக அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய முன்னாள் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்!

T

The Leader Desk

ஜூன் 24, 2024 • 4:07 AM

கணவருடனான  உடலுறவுக்   காட்சிகளை இணையத்தில் பகிரப் போவதாக அச்சுறுத்தி  50 இலட்சம் ரூபா கப்பம் கோரிய  முன்னாள் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலட்சம் ரூபா கப்பம் கோரி, குறித்த உடலுறவுக் காட்சிகளின் காணொளிகளை இணையத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த பாலியல் செயல்களை பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
  • மேலும், இந்தக் குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இலட்சம் ரூபா கப்பம் கோரி, குறித்த உடலுறவுக் காட்சிகளின் காணொளிகளை இணையத்தில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்தக் குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பன்னிப்பிட்டிய தெபானம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இருவரும் பல தடவைகள் உடலுறவு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாலியல் செயல்களை பொலிஸ் கான்ஸ்டபிள் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கணவரின் கைத்தொலைபேசியில் காணப்பட்ட வீடியோக்களை தனது கணவருடன் உடலுறவு கொண்ட பெண்ணிடம் காட்டி, இவற்றை இணையத்தில் வெளியிடாதிருக்க ஐம்பது லட்சம் ரூபா கப்பம் தருமாறு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில், குறித்த பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்துக்குச் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அந்த பணியகத்தின் அதிகாரிகள், தலைமை பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேணுகா விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து ஓய்வு பெற்ற பெண் கான்ஸ்டபிள் மற்றும் அவரது கணவர் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...