Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணிலுக்கு இன்னும் 5 வருட கால அவகாசம் வழங்கப்படுமாயின் இலங்கை உலகின் நவீன நாடாக மாறும்! - ராஜித

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2024 • 5:35 PM

ரணிலுக்கு இன்னும் 5 வருட கால அவகாசம் வழங்கப்படுமாயின் இலங்கை உலகின் நவீன நாடாக மாறும்! - ராஜித

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (13) கொழும்பு கங்காராம விஹாரையில் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
  • மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
  • இங்கு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, ரணிலுக்கு இன்னும் 5 வருட கால அவகாசம் வழங்கப்படுமாயின் இலங்கை உலகின் நவீன நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.
  • மக்களின் நலன் கருதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன, எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டின் நிரந்தர ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (13) கொழும்பு கங்காராம விஹாரையில் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் இடையிலான “ராஜிதவின் தீர்மானம்” உடன்படிக்கையும் இங்கு கைச்சாத்திடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன்னைப் போன்று தீவிரமான தீர்மானங்களை எடுக்க விருப்பமுள்ளவராகவே ராஜித சேனாரத்ன தன்னுடன் இணைய தீர்மானித்ததாக தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, ரணிலுக்கு இன்னும் 5 வருட கால அவகாசம் வழங்கப்படுமாயின் இலங்கை உலகின் நவீன நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.

மக்களின் நலன் கருதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன, எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டின் நிரந்தர ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்தார்.

Rajitha 2024.07.13

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...