1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களுக்கிடையிலான பனிப் போர் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இதில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தொலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவொன்று வெளியாகியுள்ளது.

முழுமையான ஒலிப்பதிவு இருக்கின்ற போதிலும் ஒரு சிறு பகுதி மட்டும் இதில் வெளியிடப்பட்டுள்ளது . அந்தஒலிப்பதிவின் சுருக்கம்..

''எனது தொகுதியில் வீதி அமைக்கும் ஒப்பந்தங்கள் சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. எமது வேலைத் திட்டங்களை நிறுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, முற்றாகத் தாக்குவேன். மீண்டும் நான் உனக்குக் கூறப்போவதில்லை. நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது தானே. கரவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஆனந்தசரத் குமார வீதி அபிவிருத்திப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை நிறுத்தவில்லை என்றால், அதன்பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தாக்க ஆரம்பிப்பேன். ஞாபகம் வைத்துக்கொள். மீண்டும் நான் இதனைக் கூறப்போவதில்லை. ''

 

இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, தனது அமைச்சில் இருந்த தனது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பணியாளர்களை நீக்கிவிட்டு அமைச்சுப் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

தனது அமைச்சுக்கு வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில்லை என்பதாலும், சில அரசாங்கப் பிரமுகர்கள் மற்றும் உள்ளுர் தலைவர்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவதாலும் நிமல் லன்சா பெரும் அதிருப்தியடைந்துள்ளார்.

அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடந்து வரும் பொலிஸ் விசாரணைகள் குறித்தும் லன்சா அதிருப்தியடைந்துள்ளார்.

இதனால் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை ஜனாதிபதி திறந்துவைத்த நிகழ்வையும் லன்சா புறக்கணித்திருந்தார்.

2021ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் 35 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி தனது அமைச்சு ஒதுக்கிய போதிலும், நிதியமைச்சராக பதவியேற்ற பசில் ராஜபக்ச இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாவையே ஒதுக்கியதாகவும் குறைபட்டுள்ளார்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்தும் இதுவரையில் தனது அமைச்சின் அத்தியாவசிய தேவைக்கான நிதியை வழங்காமை தொடர்பில் அரச அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவுடன் நிமல் லன்சா பல முறை முரண்பாட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதி நிர்மாணத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலமுறை அறிவித்துள்ளார். அது தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கோரிய போதிலும் அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளதால் நிமல் லன்சா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா திடீரென அமைச்சுப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதை, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கடுமையாக விமர்சித்திருந்தார்.

குறிப்பாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமல் லன்சா மற்றும் சனத் நிசாந்த ஆகிய மூவரும் பசில்வாதிகள் என்றே கூறப்படுமுகிறது.

எவ்வாறாயினும், நிமல் லன்சா மகிந்த ராஜபக்சவிற்கு மிக நெருக்கமாக கடந்த காலங்களில் செயற்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி