1200 x 80 DMirror

 
 


நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெருமதி உண்மையான 250 ரூபாய். இதனை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்த ஆண்டு இறுதிக்குள் டொலரை் ஒன்றுக்கான பெருமதி 300 வரை உயரும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.


இந்த நிலைமைய காரணமாக நாட்டின் மொத்த வருமைநிலை உயர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை நாடு எதிர்கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் தொகை 500,000 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் போகிறது,” என முன்னாள் பிரதமர் கணித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த காணொளியில் பேசிய அவர் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வதற்காக போராடுகின்றனர். விவசாயம் அழிந்து விட்டது. சிறிய மற்றும் பெரிய வணிகங்கள் தங்கள் முலதனத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.


இதுதவிர நாடு ஜூன் மற்றும் ஜூலைக்குள் மீண்டும் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டி மொத்த கடன் தொகை 6 பில்லியன் டாலர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
''எங்களிடம் உள்ள தேசிய வளம் இளைஞர்கள்''


“நமது நாட்டில் ஒரே ஒரு தேசிய வளம் மட்டுமே உள்ளது. அந்த தேசிய வளம் இளைஞர்கள், அந்த குழுவைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தை உருவாக்க விரும்புகின்றபோதிலும் தற்போது அவர்கள் நபிக்கை இழந்துவிட்டார். தற்போதைய அரசாங்கம் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கையை உடைத்துவிட்டது என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


எனவே அவர்கள் எதிர்காலத்திற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். குறுகிய கால திட்டமும் வேண்டும். மேலும், இதை முன்னோக்கி கொண்டு செல்ல நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தேவை. என அவர் கூறியுள்ளார்.


பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 10, முதல் 20 ஆண்டுகள் வரை தேவைப்படலாம், இதனை இப்படியே விட்டுவிட்டு ஓடிவிட முடியாது. அவ்வாறு செய்தால் இன்றைய இளைய சமூதாயம் 'நாட்டின் எதிர்காலத்தை நாசம் செய்துவிட்டீர்கள், எங்கள் எதிர்காலத்தையும் நாசம் செய்துவிட்டீர்கள்' என்று எம்மை சபிப்பார்கள் எனவே அந்த பொறுப்பை நாமே நிறைவேற்ற வேண்டும். எனவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.

 


https://bit.ly/3uHGkH

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி