1200 x 80 DMirror

 
 

நாட்டில் எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று காலை அறிவித்திருந்த நிலையிலேயே பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளது.

புதிய வழிமுறைக்கு அமைய அடுத்த மூன்று மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் அவர் கூறினார்.

நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று காலை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கு 40,000மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

முன்னதாக, எரிசக்தி அமைச்சகம் 40,000மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 40,000மெட்ரிக் தொன் பெட்ரோலை வாங்குவதற்கு இந்திய அரசுக்கு சொந்தமான லங்கா IOC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்திய-இலங்கை ஒத்துழைப்பு செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேலை, லங்கா IOC நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை மின்சார சபை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி