1200 x 80 DMirror

 
 


ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் இதுவரை வெளியாகாத நிலையில், பல ஊடக நிறுவனங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.


இன்று (14) காலை பிலியந்தலை, வேவல கேம்பிரிட்ஜ் நீதிமன்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது முகமூடி அணிந்த இனந்தெரியாத 4 பேரை கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, பாதுகாப்பு அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தியதன் பின்னர் பாதுகாவலருக்கு அருகில் ஒருவர் நிற்க மற்ற மூவரும் வீட்டின் முன் சென்று கற்களையும் மலத்தையும் வீசி தாக்கியுள்ளனர்.


இந்த தாக்குதலில் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகமூடி மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்த மூன்று பேர் வீட்டைத் தாக்கும் காட்சி சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளன.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

twi 1


பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக, கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கைரேகைப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

twi 2


ஊடக அமைப்புகள் கண்டனம்


ஊடக சுதந்திரத்தின் மீதான இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


“நாட்டின் ஊடக சுதந்திரத்தை கடுமையான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும், ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதும் இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்,
மேலும் நீதி கிடைக்காத சூழலில் இந்த நாட்டில் ஊடக சமூகத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதல்கள், கொலைகள் மற்றும் ஆள் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய தாக்குதல்கள் இருண்ட கடந்த காலத்தை நினைவூட்டுவதாக இருக்கலாம்.” என இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


“சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பிலான அவரது முறைப்பாட்டினை உடனடியாக விசாரணை செய்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜே.வி.பி கண்டனம்


இந்த கொடூரமான தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலக முடியாது என்பதை வலியுறுத்துவதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜே.வி.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.


இவ்வாறான செயற்பாடுகள் மூலம் "எந்தவொரு ஆட்சியாளராலும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது” என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.


'தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்' - சம்பிக்க


ஊடகவியலாளர்கள், சிவில் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட குழுக்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் கோழைத்தனமான தாக்குதல்களால் மக்களை பயமுறுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.


உடனடியாக உரிய விசாரணை நடத்தி சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை பாட்டலி சம்பிக்க ரணவக்க குறித்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.



https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி