1200 x 80 DMirror

 
 

உண்மையில் எமது நாட்டுக்கு புதுமையான ஒரு கருமம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு உட்பட்டு மக்கள் சாவுக்கு கிட்ட நெருங்கி உள்ளார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் இன்று தலைவலிக்கு குடிப்பதற்கு பரசிட்டமோல் மாத்திரை கூட பெற்றுக் கொள்ளமுடியாத ஒரு நிலை. இருந்த போதிலும் நமது நாட்டினுடைய ஆட்சியாளர்கள் போல் எதிர்கட்சியினரும் ஜனாதிபதியாக வருவதற்கு பைத்தியம் பிடித்து இருக்கின்றார்கள். உண்மையான கதையை சொன்னால் இரண்டு பக்கங்களும் இருக்கக்கூடியவர்கள் ரட்டே ராலவை கொன்று சாப்பிட முயற்சிக்கின்றனர்.

அதனால் அனைத்துக்கும் முதலாவதாக சொல்ல வேண்டியது ரட்டே ரால இருப்பது நாட்டு மக்களுடைய பக்கமே. அந்த எந்தவொரு அரசியல் தலைவர்களும் ரட்டே ராலவிற்கு பொருத்தமற்றது. அது கோட்டாபய தொடக்கம் விக்ரமபாகு வரைக்கும் அவ்வாறுதான். நாட்டுக்கு பாதகம் என்று சொன்னால் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் அடிப்பேன். இடையிலேயே எந்தவித சமாதானமும் கிடையாது. நேற்று பெஸிலின் பொதுஜன மக்கள் சந்திப்பு இருந்ததனால் அதனுடன் இணைந்து அரசியல் கதையொன்றை நாட்டுக்கு சொல்லவேண்டும். அரசாங்கத்திற்கு உள்ளே தற்போது செல்லும் project தான் ஜனாதிபதி, பிரதமர், பெஸில் ஊதுதல் போட்டியாகும். ஊதுதல் குறிப்பிடுகின்ற சந்தர்ப்பத்தில் அது பிழையாகும். ஊதி வெடிக்கவைத்தல் போட்டியாகும். நீங்கள் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது சுதந்திர தின கொண்டாட்டத்தை சாதாரணமாக நடத்திய விதம். நல்ல எளிமைதானே? எரிபொருளுக்கு மாத்திரம் பல கோடி ரூபாய்க்கள். இவ்வளவு சக்தி நெருக்கடி உள்ள ஒரு நாட்டில் குறித்த செலவுகளை ஈடு செய்ய முடியுமா?அதுதானா தேசிய அபிமானம். தேசிய அபிமானம் பார்க்கத்தேவையில்லை. உலக நாடுகளிடையே நாலாபக்கமும் பிச்சை கேட்டு இங்கு அபிமானத்தை கொண்டாடுகிறார்கள்.ரட்டே ரால அதற்கு சொல்வது கோழையின் தேசிய அபிமானம் என்று.

பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேசிடமிருந்து சீனாவிடமிருந்து மியன்மாரிடமிருந்து அரிசியை பிச்சை கேட்கிறார்கள். அவுஸ்திரேலியாவிடம் இருந்து பறுப்பை பிச்சை கேட்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெயை பிச்சை கேட்கிறார்கள். அவ்வாறு பிச்சை கேட்க சென்றவர்கள் இங்கு பல கோடி ரூபாய் பணத்தை விழாக்களுக்காக செலவிடுகின்றார்கள். பார்த்தீங்கதானே நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஜி.எல் சொன்ன கதையை. இந்தியாவிடமிருந்து கடன் பெற்று வந்தோம் என்று ஒரு பெரிய வீரனைப் போல் குறிப்பிட்டார். உண்மையில் இது பைத்தியம் தானே? தங்களுடைய நாட்டினுடைய மக்கள் இவ்வாறு துக்கம் அல்லது கஷ்டப்படுகிற சந்தர்ப்பத்தில் இவ்வாறான நாடகங்களை செய்வது பைத்தியர்களுக்குதானே? மக்களுக்கும் பைத்தியம் இல்லையாயின் இதுகுறித்து இரண்டு தடவை யோசிக்க வேண்டும். சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாட ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டது ஊதுவதற்குத்தான். ஊதிய விடயம் எவ்வாறாயினும்.ஏதாவது ஒன்று மிகுதியாக இருந்திருந்தாலும் அந்த இருந்த விடயமும் இல்லாமல் போய்விட்டது என்று தான் ரட்டே ரால நினைப்பது. அது முடிவடைந்தது மாத்திரமே. அடுத்ததாக ஆரம்பிக்கப்பட்டது ஜனாதிபதி, பிரதமரை பாவித்து பெஸில் ஊதுவது. உண்மையில் பாவம் அப்பா அந்த பிரதமர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதை காண முடிந்தது.

இருந்தபோதிலும் பெஸில் ஊதுவது என்பது ஒரு நீண்டகால வேலையாகும். இருப்பினும் ஊதுவதற்கு கடினமாக இருப்பதால் அது காலம் எடுக்கும். அடுத்ததாக முடியுமாக இருந்தாலும் முடியாது இருந்தாலும் அது 2024 ஆம் ஆண்டு வரைக்கும் செல்லுகின்ற project ஒன்று. பெஸில் ஒரு இலட்சம் வேலைத்திட்டங்களோடு கிராமத்துக்கு வருவதற்கு தயாராகிறார். அதனால்தான் கிராமத்தில் உள்ள விடயங்களும் இல்லாமல் போவது. அந்த கிராமத்துடனான கலந்துரையாடல் மூலமும் நடக்கிறது. அது ஒரு புதுமையான விடயமாகும். நாட்டில் சீமெந்து பைக்கற்றுக்கள் எடுக்கக்கூட இடமில்லை. ஒரு இலட்சம் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிர்மாண துறையில் ஈடுபடுவது களிமண்ணை பயன்படுத்தியா என்பது புரியவில்லை. டலஸ் இடம் இதுகுறித்து கேட்டால் அவர் வழங்குவது pending பதிலாகும். ஒரு இலட்சம் வேலை திட்டம் செயல்படுத்தப்படுவது நான்கு கட்டங்களாகவாம். அதனால் தற்போது சீமெந்து அவசியப்படாதாம். ஜனாதிபதி சீமெந்து எடுத்துதருவார் என்ற நம்பிக்கை உள்ளதாம். ரட்டே ராலவிற்கு சொல்ல இருப்பது ஐயோ டலஸ் என்றுதான். உண்மையில் இந்த ஒரு இலட்சம் வேலை திட்டம் என்பது படுபொய்யாகும்.அதனால் நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் என்று நினைத்து பார்க்க முடியாது.

அது வேறு ஒன்றுமில்லை பெசிலின் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கெம்பெய்னாகும். 2023 ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டின் பிரதமராக வந்து 2024 ஜனாதிபதி தேர்தலில் நாட்டினுடைய ஜனாதிபதியாக வருவதற்கான பயணம். பெசிலுக்கு அவ்வாறான ஒரு கனவு. எதிர்பார்ப்பு இருந்தால் ரட்டே ராலவுக்கு பிரச்சினை இல்லை. இருப்பினும் அந்த எதிர்பார்ப்புக்கு நாட்டு மக்களுடைய உதிரத்தை குடிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. நேற்று பெஸிலின் கெம்பய்னின் முதலாவது கூட்டம் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. உண்மையில் தற்போது நமது நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. ஒரு நாளைக்கு 1300 பேரளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றார்கள். குறித்த தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசீலனை மூலமே. 35 பேர் நாளொன்றுக்கு மரணம் ஆகின்றனர். சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் மக்கள் ஒன்று கூடுகின்ற விடயங்களை தவிருங்கள் என்று. மக்கள் ஒன்று கூடுகின்ற கூட்டங்கள் மூலம் வைரஸ் மீள பரவும் சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாக.

அவ்வாறாயின் அவற்றை மீறுவது யார்? அந்த இடத்துக்கு சுகாதார விதிமுறைகள் பொருத்தமற்றதா? அங்கு வருகை தந்தது பிற ஜீவிகளா? இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கமே. உண்மையில் ஜனாதிபதி அவர்கள் ஒரு நாடு ஒரு சட்டம் என்று மேலும் குறிப்பிடுவாராயின் அவ்வாறு குறிப்பிடுவது ஆடை அணிந்து கொண்டு அல்ல. இந்த நாட்டினுடைய பொதுச் சொத்துக்களை நாசம் ஆக்குகின்ற அளவில் ஒரு எல்லை காணப்பட வேண்டும். இந்த நாடு என்பது ராஜபக்ஷகளின் பூதமா? இந்த நாட்டு மக்களின் உயிர் என்பது ராஜபக்ஷக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பலியா? இன்று நாட்டில் முக்கியமான எத்தனை பிரச்சினைகள் உள்ளது? அவ்வாறு உள்ளபோது ஜனாதிபதி, பிரதமர், பெஸிலிற்கு இது போன்ற கீழ்த்தரமான நாடகத்தை அரங்கேற்ற என்ன உரிமை இருக்கின்றது. அவ்வாறு செய்வதற்கு தேவையான நிலவரமா இந்த நாட்டில் காணப்படுகின்றது. வலுசக்தி பிரச்சினைக்கு பதிலை தேடிவிட்டா இவ்வாறான கீழ்த்தரமான நாடகங்களை நடிப்பது. நாட்டின் அத்தியவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறைக்கு விடை தயார் செய்துவிட்டா ஜனாதிபதி அவர்கள் நீங்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடிப்பது.

1402 RateRale2

மஹிந்த குறிப்பிடுகின்றார் நேற்றிலிருந்து புதிய ஒரு பயணமாம். அவ்வாறாயின் இவ்வளவு காலம் உருளைக்கிழங்கை அவித்தார்களா தெரியவில்லை? சுபீட்சத்தின் நோக்கு செயல் படுத்தப்படுவது நேற்றிலிருந்தாம். நேற்றைய கூட்டத்தில் இருந்து ஒரு விடயம் தெளிவாக உள்ளது. இவர்கள் புதிய பயணத்திற்கு தயாராகிறார்கள். ரட்டே ராலவிற்கு அந்த விடயம் தென்படுகின்றது. இந்த நாட்டினுடைய வங்கி கட்டமைப்பை தரையில் உட்கார வைத்துவிட்டனர். ஒட்டுமொத்த வங்கி கட்டமைப்பிலும் டொலர் இருப்பு எதிர்மறைக்கு விழுந்துள்ளது. அரசாங்கம் வங்கி கட்டமைப்பை சூறையாடிவிட்டது. நாட்டில் வங்கி கட்டமைப்பில் கூடிய கடன் எடுத்திருப்பது அரசாங்கமே. அந்த அளவானது வங்கிகள் வழங்கியுள்ள கடன் அளவில் 52 வீதமாகும். அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்து கடனை கொடுக்க முடியாமல் உள்ளது. தற்போது பெசிலின் வரவு செலவுத் திட்டத்தில் பதிலை செயற்படுத்த முனைகின்றார்கள். எமது நாட்டில் வியர்வை சிந்தி உழைக்கின்ற மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை கொள்ளை அடிப்பதற்கு ராஜபக்சக்கள் தீர்மானம் எடுத்து இருக்கின்றார்கள். அவ்வாறு குறிப்பிடுவது EPF, ETF நிதியங்களின் வருடாந்த இலாபத்தின் 25 வீதத்திற்கு வரியை அறவிட வர்த்தமானி வெளியிட்டுள்ளார்கள். தற்போது நிமல் ஸ்ரீபால குறிப்பிடுகின்றார் அவர் அதற்கு எதிர்ப்பு என்று. அவ்வாறாயின் என்ன பம்மாத்துக்கா வரவு செலவுத் திட்டத்துக்கு கையை உயர்த்தியது.

அப்படியாயின் எமது நாட்டில் இந்த நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்ற இலட்சக்கணக்கான மக்களின் பணத்தை சூறையாடுவது இரண்டாவது தடவையும் நடக்கவுள்ளது. இதற்கு முன்னர் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து பேண அரசாங்கம் EPF, ETF நிதியத்தை பாவித்தது. உண்மையில் ரட்டே ரால அந்த நிதியத்திற்கு பங்களிப்பு வழங்கும் இலட்சக்கணக்கான மக்களிடம் கேட்டுக் கொள்வது தங்களுடைய உரிமையை கொள்ளையடிக்கும் அந்த செயற்பாட்டுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று. அதற்காக போராடுங்கள். சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். தற்போது எமது நாட்டில் நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எல்லாவிடங்களிலும் கேட்கக் கூடியதாக இருப்பது விளைச்சல் குறைவாக உள்ளது என்று. இந்த மோசமான அரசாங்கமானது விவசாயத்தை நாசமாக்கியது மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டினுடைய உணவுப் பாதுகாப்பையும் நாசப்படுத்தி உள்ளது. அவ்வாறு செய்துவிட்டு மீண்டும் ராஜபக்சக்கள் வீர பேச்சுக்களை கேட்கின்ற பொழுது துக்கம் ஏற்படுவதானது இந்த நாட்டினுடைய மக்களை நினைத்துத்தான். உண்மையில் இந்த நாட்டினுடைய மக்கள் இவ்வளவு தூரம் மடையர்களா என்று நினைக்க தோன்றுகின்றது.

தங்களுடைய உயிர்களை, பிள்ளைகளுடைய எதிர்காலம், நாட்டினுடைய எதிர்காலத்தை இவ்வாறான ஒட்டுண்ணி குடும்பத்திற்காக வேண்டி பலி கொடுப்பார்களாயின் அந்த மக்கள் குறித்து எதைப்பற்றி கதைப்பது? இருப்பினும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மீளவும் தமது பழைய விளையாட்டை விளையாடுவார்களாயின் அதனை எதிர்த்து இந்த நாட்டு மக்கள் தமது பூரண உரிமையை பயன்படுத்தல் வேண்டும். ஜனாதிபதி அவர்களிடம் இந்நாட்டின் மக்கள் கேட்க கூடிய ஒரு கேள்வி ஒன்று உள்ளது. நீங்கள் சுதந்திர தினத்தில் கேட்டுக்கொண்ட முன்மாதிரியா தங்களது சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்கள் அவர்களது சகாக்கள் வழங்கி கொண்டிருப்பது? அடுத்ததாக தாங்கள் வழங்குவேன் என குறிப்பிட்ட உயர்ந்தபட்ச முன்மாதிரியையா நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? குறைந்தபட்சம் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அவற்றை சொல்லாமல் ஜனாதிபதி அவர்களே விடுங்கள். ஜனாதிபதி என்று வாயெடுக்க முன்னர் மத்திய அதிவேக பாதையில் 161 மில்லியன் டெண்டர் முறைகேடு தொடர்பில் அறிக்கைகள் வெளியாகின்றது. இனி எவ்வாறு குறிப்பிடுவது தாங்கள் தூய்மையானவர் என்று.

ரட்டே ரால அதனால் அதனையும் சொல்லுவார். எங்களுடைய நாட்டினுடைய மக்கள் படுகின்ற துன்பம் அமெரிக்காகாரனுக்கு தெரியாது. அது தற்போது உள்ள அமெரிக்கரைப்போல் முன்னாள் அமெரிக்கா காரருக்கும் தெரியாது. அந்த அமெரிக்கன் உரிமையை பிரதிநிதித்துவம் செய்யும் ராஜபக்ஷக்களுக்கு இது புரியாது. இன்று இந் நாட்டினுடைய மக்கள் கடந்து கொண்டிருக்கும் போக்கு அமெரிக்கன் ராஜபக்ஷக்களுக்கு இந்த நாட்டை வழங்கிய பாவ கர்மத்தினாளாகும். பிரச்சினை இருப்பது அந்த விடயத்தை தெரியாத மக்கள் உள்ள இந்த நாட்டில் அவற்றை தெளிவுபடுத்தி சொல்வதற்கு உரிய எதிர்க்கட்சி இல்லாத பிரச்சினையாகும். நேற்று மஹிந்த சொன்ன அந்த சவால் முடியுமாக இருந்தால் பாதைக்கு இறங்குங்கள் என்று எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார். வீதியில் அதனை பார்ப்போம் என்று குறிப்பிட்டார். மஹிந்த ஒரு விதத்தில் சொன்னது ரட்டே ரால குறிப்பிட்ட விடயத்தை தான். நீங்கள் பிரிந்து இருப்பதனால் நாங்கள் பயம் இல்லை என்று மஹிந்த குறிப்பிட்டார். நாடு தொடர்பில் எண்ணாது தங்களுடைய அதிகாரத்தை மற்றும் நினைக்கின்ற இவ்வாறான மடத்தனமான, இறந்த, கீழ்த்தரமான எதிர்க்கட்சிக்கு இன்னும் குறித்த விடயத்தை புரியுமளவிற்கு மூளை வளரவில்லை.

இல்லையெனில் பொது வேலைத் திட்டத்தின் கீழ் மக்களை ஒழுங்குபடுத்தி இந்த கொடுக்கல் வாங்கலை ராஜபக்சக்கள் சொல்லுகின்ற இடத்தில் தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். அவ்வாறு செய்யாமல் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாக இல்லாது மறைமுகமாக செய்து கொண்டிருப்பது ராஜபக்சக்களின் இருப்பை பாதுகாப்பது மட்டுமே.

அப்படியாயின் சென்று வருகின்றேன்
கடவுள் துணை
வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி