பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அதன் காரணமாக ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை நம்பிக்கைகொண்டு தமிழ் தலைமைகள் பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (22) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

புதுவருட நாடாளுமன்ற உரையின்போது வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை பேசவருமாறு அழைப்பு விடுத்துள்ளமையை வடகிழக்கில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தலைமைகள் ஏன் சாதகமாக பார்த்து விடக்கூடாது என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

ஜனாதிபதியின் அரசியல் பரவலாக்கல், அரசியல் ரீதியான தீர்வுதிட்டம, ஒரு பக்க பௌத்த மேலாதிக்க செயற்பாடு, காணாமல் போனவர்களின் பிரச்சினை, கடந்த காலத்தில் அவரின் செயலாளராக இருந்த காலத்தில் நடைபெற்ற தமிழின படுகொலைகள் என பல குற்றச்சாட்டுகளை தமிழ் மக்கள் அவர் மீது முன்வைத்த நிலையில்,

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் இலங்கைக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற வகையிலும் தமிழர்களுக்கான ஒரு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையிலும் தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களை பேசுவதில் எந்த தவறும் இல்லை.

தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்படாத நிலையில் உள்ள பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன. அந்த சூழ்நிலைகளை தமிழ் தலைமைகள் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

வடகிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் தேசியத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடனேயே மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக்கூடாது.

இந்தவகையில் நாங்கள் நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை தமிழ் தலைமைகள் பேசியேயாக வேண்டும். அந்த பேச்சுவார்த்தை ஊடாக கணிசமான தீர்வினை எட்ட முடியும்.

அதில் நம்பிக்கை கொண்டு பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். இதேபோன்று ஜனாதிபதியினால் புலம்பெயர் மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஏதாவது தமிழ் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வெளிநாடுகளில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுவதில் எந்த தவறும் இல்லை.

இலங்கை ஜனாதிபதி இலங்கைக்குள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கான தீர்வு, காணாமல்போனவர்களின் பிரச்சினையென தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து பேசவேண்டிய தேவை புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் உள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பினை புலம்பெயர் அமைப்புகள் சாதகமான பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தூதரகங்கள் ஊடாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பினை நாங்கள் தேவையற்ற ஒன்றாக கருதினாலும் அந்த அழைப்பினை புலம்பெயர் அமைப்புகள் சாதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.        

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி