கொவிட் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு மீண்டும் வழங்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று (21) தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கொவிட் நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது.

இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இன்று உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி