நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை நேற்றைய சந்தை நிலவரப்படி, 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நேற்றைய தினம் (11) 160 ரூபா முதல் 165 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், நகர் புறங்களிலுள்ள சில்லறை வர்த்தக நிலையங்களில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 200 ரூபாவை எட்டும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 105 ரூபாவிற்கு குறைவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு குறைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் Q-SHOP உள்ளிட்ட அரச வர்த்தக நிலையங்களில் அரிசியை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி