தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகளை ஆவணத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டாமென சர்வதேச தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில், இன்ரஸ்ரிஓல் (IndustriALL) தொழில்துறை சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு வத்துப்பிட்டிவள சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச சந்தைக்கு கையுறைகளை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமான ஏ.டி.ஜி கிளவுஸ் நிறுவனத்தின் (ATG Gloves Knitting) தொழிற்சங்க அடக்குமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

இந்த செயற்பாடானது, இலங்கை தொழிலாளர் சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சுட்டிக்காட்டியுள்ளது.

"இந்த தொழிலாளர் பிரச்சினையில் தலையிட்டு விசாரணை செயன்முறையை விரைவுபடுத்த வேண்டும்" என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அட்லீ ஹுய், தொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கைகளை ஆவணங்களுடன் மட்டுப்படுத்தாது, சர்வதேச சமூகத்திற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கத்தின் கிளையை நிறுவியதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் வத்துபிட்டிவல ஏடிஜி தொழிற்சாலையில் பணியாற்றிய 16 தொழிலாளர்கள் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளைத் தீர்க்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல்,

தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எதிராக தொழிற்சாலையில் பயிற்சி பட்டறைகளை நடத்துதல்,

கொவிட்-19 சுகாதார வழிமுறைகளை மீறுதல், தொழிற்சங்கத் தலைவர்களை இழிவுபடுத்துதல் மற்றும் தமிழ் தொழிற்சங்கத் தலைவருக்கு எதிராக ஏனைய தொழிலாளர்களை இன ரீதியாகத் தூண்டுதல், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கம்பஹா தொழிலாளர் அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தொழில் திணைக்களம், ஏடிஜி நிறுவனத்திற்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை என வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

IndustriALL என்பது சுரங்க, எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் இலங்கை உட்பட 140 நாடுகளில் 50 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி