இத்தனை அதிகாரங்களை கொண்டிருந்த ஜனாதிபதி தாம் மட்டுமே செயற்படுவதாகவும் அதிகாரிகள் செயற்படவில்லை என கூறி ” மூக்கினால் அழுவதாக முன்னிலை சோலிச கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள 12 ஆயிரம் கிலோ லீற்றர் கொள்ளளவை கொண்ட 99 எரிபொருள் குதங்களை இந்தியாவுக்கு கையளிப்பதற்கான உடன்படிக்கை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் செய்து கொள்ளப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே புபுது ஜாகொட மக்கள் இயக்கம் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் எரிபொருள் நிறுவனத்திற்கு திருகோணமலையின் சில எரிபொருள் குதங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தற்போதைய நிலையில், பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதப்படும் 15 குதங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் 74 குதங்களை இந்தியாவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்த அமைப்பு ஒன்றுக்கு கையளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 51 வீத பங்கு பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கும் 49 வீத பங்கு இந்தியாவுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ள போதும், இணைந்த அமைப்பின் அதிக அதிகாரங்கள் இந்தியாவுக்கே வழங்கப்பட உள்ளதாக புபுது ஜாகொட குறிப்பிட்டார்.

இதேவேளை முத்துராஜவெல எரிபொருள் குதம் மற்றும் நாட்டில் உள்ள 100க்கு மேற்பட்ட இந்திய எரிபொருள் நிறுவனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆகியவற்றை இணைத்து அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிக அதிகாரத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதேநேரம் மசகு எண்ணெய்யை விட நேரடியாக எரிபொருட்களை இறக்குமதி செய்வது இலாபமானது என்ற அடிப்படையிலேயே சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியதாக அமைச்சர் உதயகம்மன்பில குறிப்பிட்ட போதும் அமெரிக்காவும் சீனாவும் இலங்கையில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புபுது ஜாகொட தெரிவித்தார்.

நடைமுறை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் 20வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கான அதிக அதிகாரங்களை கொண்டிருக்கின்ற போதும் அந்த அதிகாரங்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை சீர்ப்படுத்த பயன்படுத்தப்படவில்லை

மாறாக நாட்டில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. என்று புபுது குற்றம் சுமத்தினார்

இத்தனை அதிகாரங்களை கொண்டிருந்த ஜனாதிபதி தாம் மட்டுமே செயற்படுவதாகவும் அதிகாரிகள் செயற்படவில்லை என கூறி ” மூக்கினால் அழுவதாக ” புபுது ஜாகொட தெரிவித்தார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி