வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி குறித்து இன்றும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால், வடமத்திய மாகாணத்தின் கெப்பிட்டிகொல்லாவயின் 600 குடும்பங்களையும் பதவிய பகுதியின் 430 குடும்பங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளா் பிரிவுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது முற்றிலும் வவுனியா வடக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரியபோதும் இதுவரை சந்திப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

இது வடக்கை பொறுத்தவரை உணர்ச்சிவயப்படும் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உலகில் பொலிஸ் சித்திரவதைகளுக்கு எதிரான முறைப்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது பெருமைப்படக்கூடிய விடயம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

எனவே இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சுயாதீனமாக இயங்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி