சீனாவுக்கு விற்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் சொத்துக்களை விற்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது முதலில் தாய் நாடு, இரண்டாவதும் தாய் நாடு, மூன்றாவதும் தாய் நாடு என தனது மார்பால் அடித்து மண்ணை முத்தமிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் இதயம் இன்று அதிர்ந்துபோகும் என்று தான் கருதுவதாக அவர் கூறுகிறார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் இதயம் சீனாவுக்கும், நுரையீரல் அமெரிக்காவுக்கும் விற்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பது சபிக்கப்பட்ட பாவம் என்றும் அவர் கூறினார்.

இன்று எங்களிடம் எதுவும் மிச்சமில்லை, அனைத்தும் ஒவ்வொன்றாக விற்கப்படுகிறது என்றும் வரவு செலவு விவாதத்தின் போது ரெிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி