மக்கள் பலத்தால் பாராளுமன்றத்திற்கு வந்த நான் பசில் ராஜபக்ச அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பயப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இன்று நகைச்சுவையாக மாறியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

நியூ சிட்டிசன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன உரம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டில் விரைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இப்போது, 'பொஹொட்டு' கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது ஒழுங்கமைக்கப்பட்ட வாய்த் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவுடன் ஆரம்பித்த வாய்த்தாக்குதலுடன் தற்போது அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஜோன் செனவிரத்னவும் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவினால் துறத்திவிடுவதற்கு குறிவைக்கப்படுகின்றமையே இதன் விசேட அம்சமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி