வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 120 அடி மொத்த உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 11ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, தனது மொத்த உயரமான 90 அடியில் 87.7அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், தாராபுரம் மூலனூர், கரூர் உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வரும் நிலையில், தென்காசி குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி திடீரென உருவான காட்டாற்று வெள்ளத்தால், நடைபாதைகள் சேதமடைந்துள்ளன. தடுப்பு கம்பிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறையும் சேதமடைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102அடியாக நீடித்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 2800 கனஅடி வீதமாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 4977 கனஅடி வீதமாக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனது மொத்த உயரமான 32அடியில் 27.5அடியை எட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் ஆறுகள் வாய்க்கால்கள் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது பண்டுதகுடி, சாத்தனூர் ,அய்யம்பேட்டை ,வேல்குடி அண்ணு குடி, பெரிய குருவாடி குலமாணிக்கம் ஆகிய கிராமங்களில்நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மற்றும் தாளடி பயிர்கள் மழைநீரீல். மூழ்கி அழுகி வருகிறது இப்பகுதியில் உள்ள அமராவதி வடிவாய்கால் வழியாகதான்.18 கிராமங்களின் மழைநீர் வடிய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரத தனால்அமராவதி வடிவாய்க்கால் இருபுறமும் தூர்ந்து செடி கொடிகள் மண்டிக்கிடக்கிறது மழைநீர் வடிய பல நாட்கள் ஆகும் இதனால் நெல் பயிர்கள் அழுகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி