கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் கொள்கலன்களை புகையிரதத்தில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டமையால் புகையிரதத் திணைக்களம் சுமார் 12 கோடி ரூபாய் வருட வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

அரசாங்கத்தின் பொது கணக்குகள் சம்பந்தமான பாராளுமன்றக் குழு (Copa) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்படும் கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்கள் புகையிரதத்தின் மூலம் ஒருகொடவத்த கொள்கலன் முறறத்திற்கு கொண்டு செல்லப்படாமையால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ரயில்பாதை இருந்தாலும், கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் இதற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடுவதாக புகையிரதத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் அரசாங்க பொது கணக்குகள் சம்பந்தமான பாராளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.

புகையிரதத் திணைக்களத்தில் எரிபொருள் போக்குவரத்து முறையாக விருத்தி செய்யப்பட்டிருந்தாலும், துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்ட திட்டங்களுக்கு நிதி இல்லையென்பது கோபா குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி