பியகம அன்செல் லங்கா நிர்வாகத்தால் நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் எட்டு வருட நீதி மற்றும் நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக இன்று ஒக்டோபர் 15ஆம் திகதி சர்வதேச போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி கையுறைகள் உற்பத்தியாளரான அன்செல், தொழிலாளர்கள் மீது எல்லையற்ற பணி சுமையை திணிப்பதற்கு எதிரான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11 தொழிற்சங்கத் தலைவர்களை பணிநீக்கம் செய்தது.

அன்செல் லங்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தாலும், நிறுவன முகாமையாளர்கள் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ததோடு, எட்டு வருடங்களாக எவ்வித தீர்வையும் வழங்கவில்லை.

சங்கத் தலைவர் அதுல கமல், செயலாளர் விபுல களுஆராச்சி, பொருளாளர் கே. எஸ் கணபதி, கமல் ஜெயதிஸ்ஸ, தசந்த ஜயலத், சந்தன ரோஷான், சாந்த குமார் முதலிகே, ஏ.எல்.எம் நசார், அஜித் பிரியந்த, ஜே.பி.ஜி. கே. ஜயவிக்ரம மற்றும் ரோஹித த சில்வா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அன்செல்லின் தலைமையிடமாக இருக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள், நியூசிலாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய இராச்சியம், இந்த சர்வதேச போராட்ட தினத்தில் அன்செல் லங்கா தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, அன்செல் லங்கா ஒத்துழைப்பு குழுவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யுனிசன், இன்று ஒரு சிறப்பு இணைய மாநாட்டையும் திட்டமிட்டுள்ளது.

மேலதிகமாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தகம், தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், அஞ்சல் ஊழியர் சங்கம், முகாமையாளர் தொழிற்சங்கம், தாபிந்து கூட்டு, ஸ்டாண்ட் அப் ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர்கள் உட்பட இலங்கையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினத்தை முன்னிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி