ஆசிரியர் அதிபர் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக முன்னெடுக்கப்படும் ஆசிரியர் – அதிபர் வேiலை நிறுத்தத்திற்கு தீர்வு வழங்குவது எப்படி என்று தனக்குத் தெரியுமென எஸ்.பி. திசாநாயக கூறுகிறார்.

தானும் பொறுப்புக் கூற வேண்டியிருந்த விடயம் என்ற வகையில் 24 வருடங்களாக தீர்வு வழங்க முடியாத பிரச்சினையை தீர்த்துவைக்க தனக்குத் தெரியுமெனக் கூறும் முன்னால் கல்வி அமைச்சர்களில் ஒருவரும், மத்திய மாகாண மக்களால் தோற்கடிக்கப்பட்டு தேசியப் பட்டியல் உறுப்பினராக இருப்பவருமான பா.உறுப்பினரே இவ்வாறு பிதற்றியுள்ளார். ஹங்குரங்கத்தவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஆசிரியர் அதிபர்கள் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

“ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தீர்ப்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் இதற்கு அமைதியான தீர்வொன்றையே விரும்புவதாக நான் நினைக்கிறேன். அல்லது அந்த வேலை நிறுத்தத்தை அடக்கிவிட்டு நாங்கள் பாடசாலைகளைத் திறப்போம். கடந்த காலங்களிலும் இப்படி செய்துள்ளோம். ஜே.ஆர்.ஜயவர்தன செய்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக செய்துள்ளார். உலகின் செல்வந்த நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தால் அவை எம்மைப் போன்று வறிய நாடுகளாகியிருக்கும். எதிர்ப்புகளை அடக்குமுறை செய்ததால்தான் அவை செல்வந்த நாடுகளாக உள்ளன”.

தான் செய்தவை மற்றும் கூறியவைகளுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, மக்கள் வாக்களிக்காமையால் தேர்தலில் தோற்ற இவர் இவ்வாறு ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி