Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

40,000 ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கவும்! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூலை 9, 2024 • 10:46 AM

40,000 ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கவும்! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் போது, ​​ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக ஏறக்குறைய 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
  • இவ்வாறு தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்த இந்த 22,000 பேருக்கும் ஏன் அவர்களுக்கென குறிப்பிட்ட நிலையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(09) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
  • இந்த 22000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கல்வித்துறையில் உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
  • இதற்கு மேலதிகமாக கல்வித்துறையில் காணப்படும் 7 பகுதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் போது, ​​ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக ஏறக்குறைய 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கொரோனா கோவிட் காலத்தில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த உபகரணங்கள் போதியளவு இல்லாமல் இருந்தும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி தொலைதூரக் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்த இந்த 22,000 பேருக்கும் ஏன் அவர்களுக்கென குறிப்பிட்ட நிலையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(09) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த 22000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கல்வித்துறையில் உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த தரப்பினருக்கு ஏற்புடைய உரிய தீர்வு கிடைக்கும் திகதி என்ன? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மேலதிகமாக கல்வித்துறையில் காணப்படும் 7 பகுதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...