Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மரணிக்காத மனைவிக்காக 40,000 பெறுமதியான சவப்பெட்டியுடன் வீட்டுக்குச் சென்ற கணவன்: பலாங்கொடையில் சம்பவம்!

T

The Leader Desk

ஜூலை 27, 2024 • 6:28 AM

மரணிக்காத மனைவிக்காக 40,000 பெறுமதியான சவப்பெட்டியுடன் வீட்டுக்குச் சென்ற கணவன்: பலாங்கொடையில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டிக்கு பணத்தைச் செலுத்தி மலர்மாலை, உடைகள் உள்ளிட்டவற்றுடன் இறுதிச் சடங்குகளை முன்பதிவு செய்த பின்னர் மலர்ச்சாலையிலிருந்து சவப்பெட்டியை வேன் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் பலாங்கொடை பிரதேசத்தில் செய்தி பதிவாகியுள்ளது.
  • இது தொடர்பில் மூத்த பிள்ளையும் மலர்ச்சாலை உரிமையாளரும் 119 என்ற அவசர இலக்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • சவப்பெட்டிக்காக செலுத்திய 40,000 ரூபாவை மீளப் பெற்றுக் கொள்வதற்காக மலர்ச்சாலைக்கு வருமாறு மனைவிக்கும் கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டிக்கு பணத்தைச் செலுத்தி மலர்மாலை, உடைகள் உள்ளிட்டவற்றுடன் இறுதிச் சடங்குகளை முன்பதிவு செய்த பின்னர்  மலர்ச்சாலையிலிருந்து   சவப்பெட்டியை வேன் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் பலாங்கொடை பிரதேசத்தில் செய்தி பதிவாகியுள்ளது.

மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்  மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் வைத்தியர்களும் மற்றவர்களும் கூறியதாகவும் அவர்கள் அதை நம்பி இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் மலர்சாலை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தாய் இறக்கவில்லை எனவும் தாய் சமையல் அறையில் இருப்பதாகவும் பிள்ளைகள் கூறியுள்ளதுடன் மலர்ச்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை மீள எடுக்க முற்பட்டபோது குறித்த நபர் ஊழியர்களை அச்சுறுத்தியதால் மலர்ச்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை வீட்டில் வைத்துவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மூத்த பிள்ளையும் மலர்ச்சாலை உரிமையாளரும் 119 என்ற அவசர இலக்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வீட்டுக்குச் சென்று சவப்பெட்டியை மீண்டும் எடுத்துச் சென்று மலர்ச்சாலை ஊழியர்களிடம் கையளித்துள்ளனர்.

சவப்பெட்டிக்காக  செலுத்திய 40,000 ரூபாவை மீளப் பெற்றுக் கொள்வதற்காக மலர்ச்சாலைக்கு வருமாறு மனைவிக்கும் கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...