Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2024 • 5:46 AM

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடத்திச் சென்று தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், அக்காலப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பளித்தார்.
  • அத்துடன், அந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
  • ஆகஸ்ட் 4, 2009 அன்று, தனுஷ்க நிபுன ராமநாயக்க மாலபேயில் பலவந்தமாக கடத்தப்பட்டார்.
எழுத்து அளவு:

கடத்திச் சென்று தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், அக்காலப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி அமல்  ரணராஜா தீர்ப்பளித்தார்.

பலவந்தமாக கடத்தப்பட்டவர் மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவனான நிபுண ராமநாயக்க என்பவராவார்.

இந்தச் சம்பவத்துக்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, ரவிந்து குணவர்தன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

அத்துடன், அந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான  வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட  இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கவும்  நீதிவான் உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 4, 2009 அன்று, தனுஷ்க நிபுன ராமநாயக்க மாலபேயில் பலவந்தமாக கடத்தப்பட்டார்.

வாஸ் குணவர்தனவுக்கு  மற்றுமொரு வழக்குக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...