சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இந்நாட்டு மக்களுக்கு இடமளித்துள்ளதாக ஜனாதிபதி உலகுக்குக் கூறிய போலியான அலங்கார வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு, எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாதென பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதன் மூலம் தற்போதைய ஆட்சியின் அடக்குமுறை தன்மை வெளிப்படுகிறது.

அமைச்சரின் கூற்றுப்படி, சீர்குலைப்பவர்களினால் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் ஆர்ப்பாட்டங்களுக்காக தெருவிற்கு அழைக்கப்பட்டதாகவும், பொலிஸ் அமைச்சர் என்ற வகையில் தான் சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி