மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்ளக விடயங்களில் மனித உரிமைகள் என்ற போர்வையில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்வதற்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு,வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் நேற்று (14) பதில் வழங்கினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்க         வெளித்தரப்பிற்கு இடமளிக்கும் 46/1 பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் காணொளியூடாக உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி