Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இணையக் குற்றங்கள், விபசாரம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 37 இலங்கையர்கள் கைது!

T

The Leader Desk

ஜூலை 6, 2024 • 1:09 PM

இணையக் குற்றங்கள், விபசாரம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 37 இலங்கையர்கள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் இன்று (06) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது .
  • அதன்படி, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணைய குற்றங்கள், விபசாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆபிரிக்கர்கள் ஐக்கிய அரபு எமிரேட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை முதலாம் கலீஜ் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரை தெரிவிக்கிறது.
எழுத்து அளவு:

குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் இன்று  (06) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது .

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆபிரிக்கர்கள் ஐக்கிய அரபு எமிரேட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை முதலாம் கலீஜ் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரை தெரிவிக்கிறது.
 
அதன்படி, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணைய குற்றங்கள், விபசாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 இலங்கையர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய இலங்கையர்கள் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
இந்த குழுவினர் நாட்டுக்கு வந்ததன் பின்னர் மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொள்ளவுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இணையக் குற்றங்கள், விபசாரம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 37 இலங்கையர்கள் கைது! | Tamil Leader | We Lead the Nation