Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சீரற்ற காலநிலையால் நாட்டில் 33,462 மின்துண்டிப்புகள்!

T

The Leader Desk

மே 26, 2024 • 4:05 PM

சீரற்ற காலநிலையால் நாட்டில் 33,462 மின்துண்டிப்புகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடளாவிய ரீதியில் 33,462 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
  • மின்சார சபையின் தரவு அறிக்கைகளின்படி, இன்றைய (26) நிலவரப்படி, தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணங்களிலேயே அதிகளவான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
  • நேற்று (25) காலை நிலவரப்படி, 38,470 மின் தடைகள் ஏற்பட்டிருந்த போதிலும், மாலை வரை அவற்றில் 5,000 க்கும் அதிகமானவை சீர் செய்யப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
  • மற்றைய இணைப்புகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

நாடளாவிய ரீதியில் 33,462 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் தரவு அறிக்கைகளின்படி, இன்றைய (26) நிலவரப்படி, தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணங்களிலேயே அதிகளவான மின் தடைகள் பதிவாகியுள்ளன.
 
நேற்று (25) காலை நிலவரப்படி, 38,470 மின் தடைகள் ஏற்பட்டிருந்த போதிலும், மாலை வரை அவற்றில் 5,000 க்கும் அதிகமானவை சீர் செய்யப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
 
மற்றைய இணைப்புகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
அனர்த்த நிலைமைகளின் கீழ் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், சில பிரதேசங்களில் அதிகளவான விநியோக மின்னழுத்த மின் கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்துள்ளமையினால் மீளமைக்கப்பட்ட இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இன்றைய நிலையில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
 
இதேவேளை, இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையை சீர் செய்வதற்கு மிகக் குறைவான பணியாளர்களே உள்ளதாகவும் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்  மின்சார சபை சங்கம் தெரிவித்துள்ளது.
 
இது இவ்வாறிருக்க, மின் தடையை சீர்செய்வதற்காக மேலதிக சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பையோ அல்லது குறுஞ்செய்தி ஒன்றையோ அனுப்பி மின்சாரம் துண்டிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...