Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி: வெளிநாட்டவர்கள், பெண்கள் உட்பட 33 பேர் நீர்கொழும்பில் கைது!

T

The Leader Desk

ஜூன் 26, 2024 • 2:56 AM

இணையம்  ஊடாக பாரிய நிதி மோசடி: வெளிநாட்டவர்கள், பெண்கள் உட்பட 33 பேர்  நீர்கொழும்பில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • சந்தேக நபர்களிடமிருந்து 109 கையடக்கத் தொலைபேசிகள், 46 கணனிகள் மற்றும் 3 மடிக்கணினிகள் டஎன்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
  • சந்தேக நபர்கள் பாகிஸ்தான், அல்ஜீரியா, நேபாளம், இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 109 கையடக்கத் தொலைபேசிகள், 46 கணனிகள் மற்றும் 3 மடிக்கணினிகள் டஎன்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பாகிஸ்தான், அல்ஜீரியா, நேபாளம், இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந் தெரியாத நபர் ஒருவர் தன்னை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்ததாகவும், சமூக வலைதளமான டிக் டோக்கில் உள்ள வீடியோக்களை லைக் செய்து கமெண்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் அந்த வட்ஸ்அப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின்போதே இவர்கள் கைது செய்யய்ப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...