கொவிட் கட்டுப்படுத்தல் திட்டத்தை முறைப்படுத்துவதற்காக சுகாதார மேலதிகாரிகளின் கவனத்தை பெறும் நோக்கில் பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று (10) சுகயீன விடுமுறை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

‘தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதில்லை. நோயாளிகளோடு நெருக்கமாக இருந்தவர்களை கண்காணித்தல் நோய் தொற்றியவர்களை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகள், நோயாளர்களை வைத்தியசாலைகளில் சேர்த்தல் போன்றவை முறையாக நடைபெறுவதில்லை.

இதனால் அழுத்தத்திற்கு ஆளாவதும், மக்களின் வெறுப்பிற்கு ஆளாவதும் பொது சுகாதாரப் பரிசோதகர்களாகிய நாங்கள்தான். எனவே மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கத்தில் பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் சுகயீன விடுமுறை நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்தோம்” என மேற்படி சங்கத்தின் தலைவர் ரஞ்சித் திசாநாயக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி