Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது மாநாடு நாளை: அமீனுக்குப் போட்டியாக ரிப்தி உட்பட பலர் களத்தில்!

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 4:32 AM

முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது மாநாடு நாளை: அமீனுக்குப் போட்டியாக ரிப்தி உட்பட பலர் களத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆவது வருட மாநாடு நாளை 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும்.
  • வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர் எம். சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம்.
  • இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பிரதம அதிதியாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மார்க்ஸ் அன்றோ ரன்சே கலந்து கொள்வார்.
எழுத்து அளவு:
27 ஆவது வருட மாநாடு நாளை 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும்.
 
இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பிரதம அதிதியாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மார்க்ஸ் அன்றோ ரன்சே கலந்து கொள்வார்.
 
கௌரவ அதிதியாக இலங்கையின் ஈரான் இஸ்லாமிய குடியரசுத் தூதுவர் டாக்டர்  அலி றீஸா டெல்கோஸ் கலந்து கொள்வார்.
 
பிரதம பேச்சாளராக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ. மன்சூரும் கௌரவ பேச்சாளராக இந்திய - யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மட் அபூபக்கர் கலந்து கொள்வார்.
 
சண்டே ஐலேண்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
 
அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்கான் பீ இப்திகார், ஐ.ரி என். வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர் எம்.  சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம். பிரதானி பஷீர் அப்துல் கையூம், மூத்த ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசீம், எம்.எஸ். அமீர் ஹுஸைன், பிராந்திய ஊடகவியலாளர் எம்.எம்.எம் பஸீர்,  வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன்,  தினக்குரல் ஆசிரியர் ஆர்.பீ. ஹரன், உதயம் செய்தி ஆசிரியர் சிராஜ் எம். ஷாஜகான் ஆகியோரும்  இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
 
நிகழ்வில் போரத்தின் உதவித் தலைவர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த மகாநாட்டில் வருடாந்த நிர்வாகத் தெரிவும் இடம்பெறுகிறது. பலரும் பல பதவிகளுக்குப் போட்டியிடுவதுடன்  இம்முறை தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம் அமீன் போட்டியிடுவதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் வளவாளருமான ரிப்தி அலி உட்பட பலரும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது மாநாடு நாளை: அமீனுக்குப் போட்டியாக ரிப்தி உட்பட பலர் களத்தில்! | Tamil Leader | We Lead the Nation