Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தனமல்விலவில் பாடசாலை மாணவி 22 மாணவர்களால் 7 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2024 • 4:27 AM

தனமல்விலவில் பாடசாலை மாணவி 22 மாணவர்களால் 7 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி அதே பாடசாலை மாணவர் ஒருவருடன் காதல் உறவு கொண்டிருந்தார்.
  • பின்னர், அங்கிருந்த இரு மாணவர்களுடன் சேர்ந்து, மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுவைப் பருக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வீடியோ எடுக்கப்பட்டது.
  • பின்னர் அந்த மாணவர்கள் இந்த வீடியோவை மாணவியிடம் காட்டியுள்ளனர், மேலும் அப்பகுதியில் உள்ள மற்றைய இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட 20 மாணவர்கள் ஒரு வருடத்தில் ஏழு முறை ் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் 22 மாணவர்களினால் ஏழு தடவைகள் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தனமல்வில பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இச்சம்பவத்தை பாடசாலை அதிபர், ஒழுக்காற்று குழு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் மூடி மறைத்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் நபர்களை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தனமல்வில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின்போதே இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி, குறித்த மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரவழைத்து, அவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
 
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி அதே பாடசாலை மாணவர் ஒருவருடன் காதல் உறவு கொண்டிருந்தார். இந்நிலையில் மாணவியை ஏமாற்றி நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த இரு மாணவர்களுடன் சேர்ந்து, மாணவிக்கு வலுக்கட்டாயமாக மதுவைப் பருக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர் அந்த  மாணவர்கள் இந்த வீடியோவை மாணவியிடம் காட்டியுள்ளனர், 
 
மேலும் அப்பகுதியில் உள்ள மற்றைய இரண்டு  பாடசாலைகளைச்  சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட  20 மாணவர்கள் ஒரு வருடத்தில் ஏழு முறை ் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனமல்விலவில் பாடசாலை மாணவி 22 மாணவர்களால் 7 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம்! | Tamil Leader | We Lead the Nation