அதற்காக அற்பணிப்புடன் செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்திலும், அதை நிறைவேற்றியதற்கு பின்னும் அதற்கு எதிராக எமது அமைப்பு செயல்பட்டது.
ஆனாலும் நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் கௌரவத்தையும், எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் முழுமை பெற்ற அரசியலமைப்பாகவோ, இறுதியான முடிவாகவோ 22 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கருத முடியாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
இன்றைய தினத்தில் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முடிவை, புதியதொரு அரசியல் அமைப்பை நிறைவேற்றிக்கொள்ளும் வரை மேற்கொள்ளப்படவேண்டிய இடைக்கால அரசியலமைப்பு சீர்திருத்தமாகவே நாம் கருதுகின்றோம். அதன் காரணத்தினாலேயே நாம் இதை வெற்றியாக குறிப்பிட்டோம்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களின் கௌரவத்தையும், நாட்டின் நலனையும் பேணிப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்காக குரல் கொடுத்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள், சுதந்திரம் போன்ற விடயங்களை பாதுகாக்கும் கடமை எம் அனைவருக்கும் இருக்கின்றது.
இன்றைய தினத்தில் பெற்ற இந்த வெற்றியை அதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு நாட்டின் அனைத்து அரசியல் சக்திகளிடனும் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கும், பெருமளவிலான ஊழல் நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எதிர்காலத்திலும் முன்னோடியாக செயல்படும்.
கரு ஜயசூரிய
தலைவர்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
22 ஆவது சீர்திருத்தத்தை நிறைவேற்றியமை ஜனநாயகத்தை போற்றுபவர்கள் பெற்ற வெற்றியாகும்.
T
The Leader Desk
அக்டோபர் 21, 2022 • 3:31 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதற்காக அற்பணிப்புடன் செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
- முன்னாள் ஜனாதிபதியின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்திலும், அதை நிறைவேற்றியதற்கு பின்னும் அதற்கு எதிராக எமது அமைப்பு செயல்பட்டது.
- ஆனாலும் நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் கௌரவத்தையும், எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் முழுமை பெற்ற அரசியலமைப்பாகவோ, இறுதியான முடிவாகவோ 22 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கருத முடியாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

