Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

T

The Leader Desk

அக்டோபர் 20, 2022 • 12:44 PM

22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
  • தாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன என்றும் இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
  • எனவே, 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாயின் இந்த திருத்தத்துக்கு தாம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் 22 ஆம் திருத்த சட்டமூல வரைவில் உள்ள சரத்தில் ஒரு துளியேணும் மாற்றம் ஏற்படக்கூடாது.
எழுத்து அளவு:
 

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.

தாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன என்றும் இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாயின் இந்த திருத்தத்துக்கு தாம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, “அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது பிரதமர், எதிர்கட்சித் தலைவரின் இணக்கத்துக்கமைய தெரிவு இடம்பெறவேண்டும்.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் 22 ஆம் திருத்த சட்டமூல வரைவில் உள்ள சரத்தில் ஒரு துளியேணும் மாற்றம் ஏற்படக்கூடாது. இதில் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருத்தங்களை கொண்டுவர முயற்சித்தால் நாம் அதனை கடுமையாக எதிர்ப்போம்.

இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி அதிகாரம் உள்ளதாக இந்த சட்டமூல வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அது அவ்வாறே இருந்தால் நாம் ஆதரவு வழங்குவோம்” என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் தாம் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த 3 நிபந்தனைகளின் அடிப்படையில் தாம் 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...