Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

21,000 பலஸ்தீன குழந்தைகளைக் காணவில்லை!

T

The Leader Desk

ஜூன் 25, 2024 • 4:31 AM

21,000  பலஸ்தீன குழந்தைகளைக் காணவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
  • ,000 குழந்தைகள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பின்னர் இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
  • அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
எழுத்து அளவு:

பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

4,000 குழந்தைகள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
 
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்திய பின்னர் இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
 
அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
 
காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
யுத்தத்தின்போது இழந்த பிள்ளைகளை பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
எனினும், அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, மோதலில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காசா பகுதியில் அதிகளவான இஸ்ரேலிய குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...