எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் மற்றொரு கட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது.வீரவில – அக்போபுர கிராமத்தில் இன்று நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் பங்குபற்றினர்.

அக்போபுர, ரணசிறிபுர மற்றும் வீரவில உள்ளிட்ட பல கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அங்கு வருகை தந்திருந்ததுடன், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

இதன்போது சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது,

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் சரியானது எனக் கூறி அதனை அப்படியே முன்னெடுப்பதென தீர்மானித்தார்கள். அந்தத் தீர்மானத்துடன் ஆரம்பமான ஏல சூதாட்டம் நமது நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட 69 இலட்சம் பேரிடமும் கூறிக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நமது நாட்டின் ஒரு சதவீத வளத்தைக் கூட விற்கமாட்டோம். அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த அரசாங்கம் முன்னெடுத்த சூதாட்ட வியாபாரத்தை, தேசிய வளங்களை விற்கும் ஏலத்தை நிறுத்துவோம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி